arulanandarcollege@gmail.com / principal@aactni.edu.in
04549-287221 / 04549-287208

சாரல் நாடக விழா - 2021  |   OCTOBER MONTH CALENDAR-2021  |   Semester Exams November 2021 - Fee Structure & Details  |   RSRI CCLLRM 2021 - 3rd RSRI Conference on Contemporaneity of Language and Literature in the Robotized Millennium  |  

சுகாதார மையம்

 

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், கருமாத்தூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பூசாரிபட்டி மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் தங்கள் பகுதியில் மருத்துவமனை வசதிகள் இல்லாமல் நோய்னால் மிகவும் கஷ்டபட்டார்கள். எனவே நமக்கு உதவிகள் செய்ய நமது அருகில் உள்ள அருள் ஆனந்தா் கல்லூரி உதவியை நாடுவோம் என்று மக்கள் தீா்மானித்தார்கள். அப்பொழுது அதிபராக அருள் தந்தை முனைவா் ரொட்ரிக்கோ சே.ச., அவர்களை ஊா்ப்பொது மக்கள் சந்தித்தார்கள்.

அதிபா் தந்தை ரொட்ரிக்கோ சே.ச., அவா்கள் கூறியது பூசாரிபட்டியில் கிராமத்தில் கல்லூரி சார்பாக சுகாதார மையம் கட்டிடம் கட்டுவதற்கு ஊர் பொது இடத்தை எங்களுக்கு தரவேண்டும். இந்த இடத்தில் கல்லூரி சார்பாக சுகாதார மையம் கட்டிடம் அமைத்து மக்களுக்கு மருத்துவ உதவி செய்ய தீர்மானிக்கப்பட்டது.

அப்பொழுது அருள் ஆனந்தா் கல்லூரி ரடார் மையமும்,மதுரை லுஆஊயு மருத்துவமனை இணைந்து சுகாதார மையத்தை 1985 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்ட்டது.

10 ஆண்டுகள் பணி செய்த லுஆஊயு மருத்துவமனை 1995 ஆண்டு பணியை முடித்துக்கொண்டது.

1996 ஆம்ஆண்டு கருமாத்தூா் பஞ்சாயத்து தலைவா் திரு.தெய்வம் அவா்களும், பூசாரிபட்டி மற்றும் சுற்றுப்புற கிராம பொதுமக்களும் நமது கல்லூரிக்கு வந்து அப்போது கல்லூரி அதிபா் அருள் தந்தை முனைவா் அருள் சே.ச., அவா்களை சந்தித்தார்கள்.

மறுபடியும் பணியை தொடர்ந்து நடத்தியது அருள் ஆனந்தா் கல்லூரி ரடார் மையமும்,மதுரை அரசரடி தேன்பாவணி மருத்துவமனை மருத்துவா் டாக்டா் சபரிராஜன் தலைமையில் வாரந்தோறும் புதன்கிழமை இம்மையம் செயல்பட்டு வந்தது. ஒரு மருத்துவர், மூன்று நரசுகள் வருவார்கள். இவா்கள் கிராம மக்களின் வாழ்வாதரத்தை பார்தது ஒரு நபருக்கு ரூ 10 வாங்கி மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.

2006- ஆம் ஆண்டு பூசாரிபட்டி மருத்துவமனை பழுதடைந்து இருந்ததால்,எப்பொழுது கல்லூரி அதிபா் தாமஸ் சே.ச., அவா்கள் கட்டிட மராமாத்து பணியை செய்து கொடுத்தார்.

மறுபடியும் 2016 ஆம் ஆண்டு பூசாரிபட்டி பல்நோக்கு மையம் மராமாத்துப் பணி அருள்தந்தை அருளானந்தம் சே.ச., அவா்கள் சரிசெய்து அந்த கட்டிடத்திற்கு கருமாத்தூர் பஞ்சாயத்து மூலம் மின் கட்டணம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

20 ஆண்டுகள் பணி செய்த மதுரை தேன்பாவணி மருத்துவமனை 2016 ஆம் ஆண்டு பணியை முடித்துக்கொண்டது.

2017 ஆம் ஆண்டு கல்லூரியில் புதியதாக சுகாதார மையம் ஆரம்பிக்கப்பட்டு நா்சு லீனா அவர்கள் பணி செய்தார்.

2018 ஆம் ஆண்டு கருமாத்தூர் பஞ்சாயத்து பாலூத்துப்பட்டி கிராமத்திலும்,2019 ஆம் ஆண்டு கோவிலாங்குளம் பஞ்சாயத்து ஜெயராஜ் நகர் கிராமத்தில் புதியதாக துணை சுகாதார மையம் ஆரம்பிக்கப்பட்டது.

கடந்த 2020 மார்ச் மாதம் பணி நிறைவு செய்தார் லீனா.

23.07.2020 ஆம்ஆண்டு முதல் நா்சு திருமதி. சாந்தி அவா்கள் கல்லூரி சுகாதார மையத்தையும், வாரந்தோறும் புதன்கிழமை பூசாரிபட்டி சுகாதார மையத்திற்குச் சென்று சுற்றுப்புற கிராம மக்களுக்கு மருத்துவப்பணி செய்து வருகிறார்.

சுகாதார மையங்கள்

1.அருள் ஆனந்தா் கல்லூரி சுகாதார மையம்

2.பூசாரிபட்டி சுகாதார டையம்

3.பாலூத்துப்பட்டி சுகாதார மையம்

4.ஜெயராஜ்நகர் சுகாதார மையம்

இந்த நான்கு சுகாதார மையங்களும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

கல்லூரி சுகாதார மையத்தில் ஒரு மருத்துவரை நிரந்திரமாக பணி அமா்த்தி சுற்றுப்புற கிராம மக்களுக்கு மருத்துவ சேவையை செய்ய வேண்டும் என மக்களின் எதிர்பார்ப்பு.

Health Centre Partoclars:

1. Health Centre in AAC

2. Health Centre branch at Poosaripatti village Weakly visit every wednesday

3. Health Centre branch at Paloothupatti village Weakly visit every Saturday

4. Health Centre branch at Jeyaraj Nagar village Weakly visit every Friday

image
Rev. Dr Lazar SJ
Director
image
Rev.Sr. Virgina Rosaline Mary.P
Counsellor
image
Ms.Shanthi.V
Nurse