அருள் ஆனந்தர் கல்லூரி 1970ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது முதல் தமிழ் மொழிப்பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது. எமது தமிழ்த்துறை வரலாற்றுச் சிறப்புமிக்கத் தமிழ்மொழி, இலக்கியம், கலை, பண்பாடு, நல்லொழுக்கம் ஆகியவற்றைக் கற்பித்து, கல்லூரியின் முதுகெலும்பாக அமைந்துள்ளது.
மாணவர்களின் மொழித்திறனை இலக்கிய இலக்கண அறிவை வளர்க்கும் வகையில் முனைவர் பட்டம் முடித்த தகுதி வாய்ந்த சிறந்த பேராசிரியர்களால் பாடநூல்கள் தயாரித்து வழங்கப்படுகிறது.
காலமாற்றத்திற்கு ஏற்ப விளக்கக்காட்சி (Power Point) மொழி ஆய்வுக்கூடம் (language lap) போன்றbபுதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி மாணவர்களின் மொழித்திறன் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
மாணவர்கள் கவிதை, கட்டுரை போன்ற படைப்பாற்றலை வளர்ப்பதற்கான பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது.
சமகால சமூக, பொருளாதார, அரசியல் நிகழ்வுகளை மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் மாணவர்களைப் பார்வையாளராகவும் பங்கேற்பாளராகவும் சொற்பொழிவாளராகவும் கொண்ட புதன் விருந்து சொற்பொழிவு ஒவ்வொரு புதன்கிழமைதோறும் நிகழ்த்தப்பட்டு வருகிறது.
மாணவர்களின் நடிப்புத்திறனை வெளிக்கொணரும் வகையில் சிறந்த நாடக நடிகர், நாடக இயக்குநர் ஆகியோர் மூலம் நாடகப்பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது.
தமிழ் இலக்கியத்தின் பன்முகப் போக்குகளை மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் சிறப்புச் சொற்பொழிவும் அறக்கட்டளைச் சொற்பொழிவும் நடத்தப்பட்டுவருகின்றன.
மாணவர்களும் ஆராய்ச்சி மாணவர்களும் பயன்பெறும் வகையில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் ஓலைச்சுவடிகள் பழைய நூல்கள், இதழ்கள் ஆகியவற்றை சேகரித்து அவற்றின் முக்கியத்துவத்தைக் கற்பித்தும் ஆவணப்படுத்தியும் வருகிறது.
கிராமப்புற மாணவர்கள், இலக்கியம் மற்றும் இலக்கணம் கற்றலுடன் மொழித்திறனைக் கற்றவர்களாகவும், சிறந்த படைப்பாளர்காளாகவும் ஆய்வுச் சிந்தனையாளர்களாகவும் உருவாக்கும் நோக்குடன் 2018ஆம் ஆண்டு முதல் இளங்கலைத் தமிழ் (B.A.Tamil) பாடம் தொடங்கிக் கற்பிக்கப்பட்டு வருகிறது.
|