தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் மாணவர்களின் தனித்திறன்களைக் கண்டறிந்து அவர்கள் மேலும் தனித்திறன்களை வளர்த்துக்கொள்ளவும் வெளிப்படுத்தவும் ஊக்கம் கொடுத்து வருகின்றனர். கல்லூரியில் நடைபெறும் விழா மற்றும் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளைப் பெற்ற மாணவர்களின் பல்சுவைக் கலை நிகழ்ச்சிகள் கல்லூரி வளாகக் கலை விழாவில் அரங்கேற்றப்படும். எம்மாணவர்கள் தொழில்முறைப் பேச்சாளர்களுக்கு இணையாக அவர்களுடன் பட்டிமன்ற வழக்காடு மன்ற நிகழ்ச்சியில் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மாணவர்கள் தங்களின் படைப்பாற்றலை வெளிக்கொணரும் வகையில் கல்லூரிகளுக்கிடையில் நடைபெறும் ஓவியம், நாடகம், கவிதை, கட்டுரை, பேச்சு போன்ற பல்வேறு கலைப்போட்டிகளில் பங்கேற்று பரிசு பெற்று வருகின்றனர். குறிப்பாக கவிதை மற்றும் பேச்சுப் போட்டிகளில் அதிகப் பரிசு பெற்று வருகின்றனர். சிறந்த மேடைப் பேச்சாளராகவும் சிறந்த நிகழ்ச்சி வருணையாளராகவும் பயிற்சி பெற்றுச் செல்கின்றனர். துறைப் பேராசிரியர்கள் அனைவரும் ஆய்வு நெறியாளர்களாக இருந்து சிறந்த ஆராய்ச்சி மாணவர்களை உருவாக்கி வருகின்றனர்.
|