உலகக் கல்விதினம் - அழைப்பிதழ் |   புதன் விருந்து அழைப்பிதழ் |   NATIONAL SCIENCE DAY EXHIBITION-2025 |   19TH RURAL SPORTS MEET & STATE LEVEL KABADDI TOURNAMENT SCHEDULED TO BE HELD ON 24TH JANUARY 2025 & 22 & 23 JANUARY 2025 |   THE INTERNAL IMPROVEMENT TEST FOR THE III YEAR STUDENTS AND PRIVATE CANDIDATES |   NATIONAL SCIENCE DAY CELEBRATION - NODAL CENTER - TNSCST |   THE INTERNAL IMPROVEMENT TEST FOR THE III YEAR STUDENTS AND PRIVATE CANDIDATES WILL BE HELD ON 21/01/2025,22/01/2025 AND 23/01/2025 AT 10AM VENUE:DAYS SCHOLAR CENTER ROOM NO:312 |   INTERNAL IMPROVEMENT TIME TABLE APRIL 2025 |   SEMESTER EXAMINATIONS FEE DETAILS APRIL 2025 |   தமிழ் இலக்கியத்துறை தேசிய இளைஞர்தினம் |   JOB INTERVIEW AND SOCIAL SKILL FOR STUDENTS: A CORPORATE PERSPECTIVE |   VALUE ADDED COURSE - EVEN SEMESTER 2024-2025 |   FACE PREP |   புதன் விருந்து அழைப்பிதழ் 08.01.2025 |   NATIONAL SEMINAR - DEPARTMENT OF ENGLISH LANGUAGE AND LITERATURE |   PERIODICAL LECTURE - INVITATION |   ONE DAY WORKSHOP ON A GLIMPSE OF REAL NUMBERS |   PHYSICS NEWSLETTER |   HEARTY CONGRATULATIONS -NPTEL EVANEGLIST |   REVALUATION RESULTS NOVEMBER 2024  |   CAMPFEST 13-12-24 RESULTS / ON STAGE EVENT RESULT |   INTERNAL IMPROVEMNT TESTS-2025 |   MS. MARISELVI, II YEAR PHYSICAL EDUCATION SECURED TWO GOLD MEDAL IN 100MTS & 200MTS |   UG-ODD SEMESTER ARREAR RESULTS (NOV. 2024) - 2024-2025 |   PG-ODD SEMESTER ARREAR RESULTS (NOV. 2024) - 2024-2025 |   PROSPECTUS 2024-2025 |  

தமிழ் இலக்கியத் துறை / Department of Tamil Literature


                        ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
                        எழுமையும் ஏமாப் புடைத்து
(திருக்குறள்- 398)

என்பது திருவள்ளுவர் வாக்கு. அவ்வாக்கிற்கிணங்க கிராமப்புற மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் நோக்கில் அருள் ஆனந்தர் கல்லூரி 1970ஆம் ஆண்டு தொடங்கப் பெற்றது. கல்லூரி தொடங்கப்பெற்ற ஆண்டு முதல் தமிழ்த்துறையும் செயல்படுகிறது. மொழித்துறையாகச் சுற்று-1இல் இயங்கிவந்த தமிழ்த்துறை, 2005-2006ஆம் கல்வியாண்டிலிருந்து சுற்று-2இக்கும் விரிவுபடுத்தப்பெற்றது. தமிழ்மொழி, தமிழ் இலக்கியங்களின் பெருமைகளை உலகளாவிய சிந்தனைத்தரத்தோடு கற்பிக்கும் நோக்கில் சுற்று-2 தமிழ்த்துறை 2017-2018ஆம் கல்வியாண்டிலிருந்து தமிழ் இளங்கலைத்துறையாக வளர்ச்சிபெற்றது. தொடர்ச்சியாக 2020-2021ஆம் கல்வியாண்டிலிருந்து தமிழ்மொழி இலக்கியத்துறையாகப் பெயர் மாற்றப்பெற்றுத் தனித்துறையாகச் செயல்பட்டு வருகிறது.


உலகளாவியத் தரத்தில் தமிழ்மொழி, இலக்கியங்களைக் கிராமப்புற மாணவர்களின் மேம்பாட்டிற்கு வழிகாட்டும் வகையில் கற்பித்தல்.

 » மாணவர்களின் மொழித்திறனை மேம்படுத்தும் சூழலை உருவாக்கிப் பயிற்சியளித்தல்.
 » இலக்கியங்களில் பொதிந்துள்ள அறநெறிக் கோட்பாடுகளையும், ஆளுமைப் பண்புகளையும், மதிப்பீடுகளையும் மாணவர்கள் அறிந்து, பயனுற வகைசெய்தல்.
 » கலந்துரையாடல்கள், சொற்பொழிவுகள் வழியாகச் சமூக மாற்றத்துக்கான சிந்தனையை வளர்த்தலும் குழு உணர்வை ஊக்குவித்தலும்.
 » பின்தங்கிய மாணவர்களை இனங்கண்டு அவர்தம் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை உருவாக்குதல்.
 » மாணவர்களின் வேலைவாய்ப்பிற்கு ஏற்ற, புதிய பாடத்திட்டங்களை அறிமுகம் செய்தல்.

 » உரையாடல் மற்றும் விவாத நிகழ்வுகள்.
 » சிந்தனைக்களச் சொற்பொழிவுகள்.
 » இலக்கியத் திறனறித் தேர்வுகள், போட்டிகள்.
 » தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையப் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி.
 » இலக்கிய மன்றக் கருத்தரங்குகள்.
 » நாடகம், நிகழ்த்துக்கலை அரங்கேற்றங்கள்.
 » கவிதை, ஓவியம், நாடகப் பயிற்சிப் பட்டறைகள்.
 » நாட்டுப்புறவியல் கள ஆய்வுகள்.
 » தொழில்நுட்பம் வழியான தமிழ்க்கல்வி.