ALUMNI

முன்னாள் மாணவர் மன்ற சந்திப்பு

12 அக்டோபர் 2019 அன்று கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரி பொருளாதாரத்துறை, இயற்பியல்துறை மற்றும் வேதியியல்துறை சார்பாக முன்னாள் மாணவர் மன்றக் கூட்டம் கல்லூரியி;ல் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் பேசில் சேவியர் சே.ச. அவர்கள் பேசியபோது அருள் ஆனந்தர் கல்லூரியில் கல்வி பயின்ற நீங்கள், தற்போது தங்கள் சார்ந்த துறையில் மிகச் சிறப்பாகப் பணியாற்றி வருகிறீர்கள் என்பதை உங்கள் ஆசிரியர்கள், நண்பர்கள் மற்றும் உங்கள் மூலமாகவும் அறிந்து கொண்டேன். இதன் மூலம் நம் கல்லூரிக்குப் பெருமை சேர்ப்பதை நினைத்து மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். நமது கல்லூரி 50 வது பொன்விழா ஆண்டு கொண்டாட இருக்கிறோம். இவ்விழாவில் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொண்டார். கல்லூரி அதிபர் முனைவர் ஜான்பிரகாசம், செயலர் முனைவர் மணி வளன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்திப் பேசினார்கள். சுமார் 850க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டு தங்கள் அனுபவங்களைப் பரிர்ந்தும், கல்லூரி வளர்ச்சியைப் பற்றி பாராட்டியம் மேலும் கல்லூரி மன்றமும் வளர தங்கள் கருத்துக்களை முன்னாள் மாணவர்கள் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துறைத்தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் செய்தனர்.